Sunday, February 6, 2011

இதுவும் ஒரு (காதல்) கவிதை..


பலமாத இடைவேளைக்குப் பிறகு
பார்த்தேன் அவளை...
என் அருகிலோ, எதிரிலோ அல்ல,
facebook-ல் - என் நண்பனின் friendlist-ல்.


துடித்தேன்.... 
அவள் - என் நண்பனின் friendlist-ல் இருபதற்காக அல்ல.......
அவள் - என் friendlist-ல் இல்லை என்பதற்காக.......


என் விரல்களோ, அவளின் பெயரருகில் இருக்கும் 
'Add as Friend' பட்டனை அழுத்த துடித்தது, mouse-ன் துணையோடு.......
என் மனமோ, அவளின் பெயரைப் பார்த்ததே போதும் - அவளின் 
'friend request'-க்காக  காத்திரு என்றது, நம்பிக்கையோடு.......


மாதங்கள் பல ஓடியது.
நான் அவளைப் பார்ப்பதும் தொடர்ந்தது (என் நண்பனின் friendlist-ல் தான்).
இடைவழியும் அதிகமானது.
அவள் என்னைக் கண்டுக்கொல்லாமல் இருப்பதும் தொடர்ந்தது.......


யோசித்தேன்...
ஒருவேளை அவள் என்னை நண்பனாகப் பார்க்காமல், அதற்க்கு மேல்.......
யோசித்தபோதே, அந்த நாள் என் மனத்திரையில் ஓடியது,
"I hate you, I never expected this from you, get lost...." என்றாள் அவள்.


அன்று - 
என் காதலைச் சொன்னால் 
இப்படி அவள் சொல்வாள் என்று தெரிந்திருந்தால்,
இன்று - 
என் friendlist-ல் இருந்திருப்பாள் அவள்.


தொடரும் என் காத்திருத்தல்.
காதலோடு அவள் வருவாள் என்றல்ல...
friend-ஆகா வருவாள் என்ற நம்பிக்கையில்.
நேரில் இல்லை என்றாலும், facebook-கிலாவது. 


computer-ஐ off செய்தேன்.
மனம் கேட்டது, "இதைப் போல் அவளும் காத்திருந்தாள்?"
உறங்கச் சென்றேன்.
கனவில் வந்தால் அவள்.  
கண் விழித்தேன்... சென்றேன் அவசரமாக computer-ஐ தேடி... 
அவளுக்கு 'friend request' அனுப்ப...



Regards,
Suresh R

No comments:

Post a Comment

Share This